• Jan 19 2025

ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம்.. ஒரு நாளைக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கும் நடிகரின் திடீர் அறிவிப்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

ஒரு நாளைக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பிரபல நடிகர் ஒருவர் தனக்கு சம்பளமே வேண்டாம் என அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண் என்பதும் இவர் சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது துணை முதலமைச்சர் பதவி ஏற்று உள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பவன் கல்யாண் திரையுலகில் நடிக்கும் போது ஒரு படத்திற்கு 30 முதல் 35 நாள் கால்ஷீட் கொடுத்து 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் அதன்படி பார்த்தால் தினமும் அவருடைய சம்பளம் 2 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஆன சம்பளத்தை அவர் நேற்று வாங்க தலைமைச் செயலகத்திற்கு சென்ற போது அவருக்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அந்த சம்பளத்தை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.



ஆந்திர மாநிலத்தில் உள்ள நிதி நிலைமை சரியில்லை என்றும் இந்த நேரத்தில் தான் சம்பளம் வாங்குவது சரியாக இருக்காது என்றும் அதனால் தான் சம்பளம் வாங்காமல் பணி செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்புக்கு திரை உலகினர் மற்றும் அரசியல்வாதிகள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பவன் கல்யாண் நடித்துள்ள ‘ஓஜி’ என்ற படத்தை இயக்கியுள்ள சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கூட தமிழக அரசின் நிதி நிலைமையை கணக்கில் கொண்டு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் பெறுவதாக அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement