பிரபல நடிகர் ஜீவா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரின் சொத்துமதிப்பு தொடர்பான விபரமும் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜீவா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஆசை ஆசையாய் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து ராம், கற்றது தமிழ், ஈ என வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களில் நடித்தார். சிவா மனசுல சக்தி படம் தான் இவருக்கு நல்ல ரீச் கொடுத்த திரைப்படம்.
சமீபத்தில் ப்ளாக் திரைப்படம் இவரின் நடிப்பில் வெளியாகி இருந்தது அதனை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு சொந்தமாக ஹோட்டல் தொழிலையும் கவனித்து வரும் இவருக்கு ரூ. 90 கோடி வரை சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று தனது 41 - வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!