தமிழ்நாட்டில் பிரபல யூட்யூபராக காணப்படுபவர் இர்பான். இவரை பல மில்லியன் கணக்கானோர் பின் தொடர்கின்றார்கள். சமீபத்தில் இவர் தனது மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பான வீடியோவை தனது சேனலில் பகிர்ந்த நிலையில் அது மருத்துவ சட்டங்களுக்கு எதிரானது என கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முதல் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை அறிவதற்காக விழா ஒன்றையும் நடத்தி இருந்தார்.
இது தொடர்பில் மருத்துவ விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரையில் தனது சார்பில் எந்த ஒரு விளக்கமும் இர்பான் வழங்கவில்லை. தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.
d_i_a
இந்த நிலையில், முதன்முறையாக தனது மௌனத்தை கலைத்துள்ளார் இர்பான். அதன்படி தனக்கும் எந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை.. நான் அரசியலை சார்ந்தவன் இல்லை என தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், தன்னை குறிவைத்து தாக்கி பேசுவது தனக்கு வேதனை தருகிறது. துணை முதல்வர் ஆன உதயநிதி ஸ்டாலினுடன் வீடியோ வெளியிட்டது ப்ரோமோஷனுகாக மட்டுமே.. அதற்காக அவர் என்னை எப்படி ஆதரிக்க முடியும்?
அத்துடன் நீதித்துறையும் அரசும் வேறு வேறு தான். அவர்களும் எப்படி என்னை காப்பாற்ற முடியும்.? நடந்த சம்பவங்கள் எல்லாம் என் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் நீதிமன்றம் செயல்படுகின்றது.
நடந்த விஷயங்களை பொருத்தவரை நான் தனிமையில் இருப்பதாக உணர்கின்றேன். தனியாகத்தான் இதை சந்தித்து வருகின்றேன். யார் யாரோ எல்லாம் என்னை திட்டுகின்றார்கள். இதனால் யாருமே எனக்காக இல்லையா என்ற எண்ணம் தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது இர்பான் வழங்கிய பேட்டி வைரல் ஆகிவருகிறது.
Listen News!