• Apr 01 2025

தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஆக்டிங் பயிற்சியாளரை அமர்த்திய ஏஆர் முருகதாஸ்.. வேற லெவல் எஸ்.கேவை பார்க்கலாம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை பொருத்தவரை பொதுவாக நடிகர் நடிகைகளுக்கு இயக்குனர் அல்லது உதவி இயக்குனர்கள் தான் நடிப்பு சொல்லிக் கொடுப்பார்கள். அதுதான் காலம் காலமாக நடந்து வந்துள்ளது. ஆனால் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தற்போது இயக்கி வரும்எஸ்கே 23’ திரைப்படத்திற்கு நடிப்பு பயிற்சிக்கான ஒரு நபர் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும், அவர்தான் முக்கிய நடிகர் நடிகைகளுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஏஆர் முருகதாஸ்  சிவகார்த்திகேயன் நடிப்பை முற்றிலும் மாற்றுவதற்காக இந்த நடிப்பு பயிற்சியாளர் பணி அமர்த்தப்பட்டு இருப்பதாகவும் அவர் இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் உள்ள நடிப்பை விட வித்தியாசமாக காட்ட முயற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் நடை , உடை மற்றும் பாடி லாங்குவேஜ் ஆகிய அனைத்துமே டோட்டலாக மாற்றப்பட்டதாகவும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனை பார்க்கும்போது இதுவரை யாரும் பார்க்காத வித்தியாசமான சிவகார்த்திகேயனை ரசிகர்கள் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.



மேலும் இதுவரை எடுத்து எடிட் செய்த காட்சிகளை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் போட்டு பார்த்ததாகவும் அதை பார்த்து தனக்கு மிகுந்த திருப்தி என்றும் தான் நினைத்ததை விட சிறப்பாக இந்த படம் வந்திருப்பதாகவும் தனது உதவி இயக்குனர்களிடம் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

எனவே சிவகார்த்திகேயனின் மற்ற படங்களை போல் காமெடி, பாடிலாங்குவேஜ் ஆகியவை இந்த படத்தில் சுத்தமாக இருக்காது என்றும் முற்றிலும் வேறுபட்ட ஒரு சிவகார்த்திகேயனை பார்க்கலாம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் ஜோடியாக ருக்மணி வசந்த என்பவர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார் என்பதும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement