• Mar 31 2025

தமிழ்ப்படமே இனி வேண்டாம்.. சூர்யாவை அடுத்து மும்பையில் செட்டிலாகும் சமந்தா..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா விரைவில் மும்பையில் செட்டில் ஆக போவதாகவும் சூர்யாவை போலவே பாலிவுட்டில் கவனம் செலுத்தப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவுக்கு ஏற்கனவே சில பாலிவுட் வாய்ப்புகள் வந்த போது அதை அவர் தட்டிக் கழித்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மிகுந்த தன்னம்பிக்கை உடன் சிகிச்சையும் தொடர்ந்து எடுத்து கொண்டு மயோசிட்டி என்ற  நோயிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நிலையில் இனி தமிழ், தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்த போவதில்லை என்றும் பாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ’சிட்டாடல்’ என்ற பாலிவுட் வெப் தொடரில் சமந்தா நடித்து வரும் நிலையில் அவருக்கு அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்திருப்பதாகவும் அதனால் தொடர்ச்சியாக பாலிவுட் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதால் மும்பையில் செட்டில் ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது.



ஹைதராபாத்தில் சமந்தா சில ஆண்டுகளுக்கு முன் கோடிக்கணக்கில் ஒரு பங்களா வாங்கிய நிலையில் தற்போது மும்பையில் ஒரு பங்களாவை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் பாலிவுட் பட வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு மும்பையில் இருந்து படப்பிடிப்பு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாலிவுட்டில் சில படங்களை தயாரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் சூர்யா மும்பையில் குடும்பத்தோடு செட்டில் ஆகி உள்ள நிலையில் அவரும் பாலிவுட் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் சமந்தாவும் மும்பையில் செட்டில் ஆகி உள்ளதை அடுத்து பாலிவுட்டில் அவர் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement