• Dec 21 2024

"குப்பை இல்லா குமரி கடல்கள்"! தளபதி TVK தொண்டர்கள் செய்த வேலை! வைரலாகும் வீடியோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் தளபதி விஜய், தனது 69வது படம் வெளியான பிறகு சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசியலில் முழு கவனம் செலுத்துவேன் என்று தனது முடிவை அறிவித்தார். நடிகர் 2026 முதல் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார். 


அவரது அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. தளபதி 69 இன் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ஒரு பெரிய நடிகரின் வாழ்க்கையை ஒரு பார்வையில் காட்டும் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். வெளியானதும் அவரது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். தளபதி விஜய்யின் படத்தை ரசிகர்கள் எவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்பதை சொல்லி தெரியவேண்டியது இல்லை உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.


இந்நிலையில் தளபதி ரசிகர்கள், TVK  தொண்டர்கள் என அவரின் அரசியல் வருகைக்கும் ரசிகர்கள் ஆதரவு தருகின்றனர். இந்நிலையில் தளபதி பெயர் சொல்லி ஏராளமான நன்மைகளை ரசிகர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அதில் கடற்கரை ஓரத்தில் இருக்கக்கூடிய கும்பைகளை TVK தொண்டர்கள் இணைந்து துப்பரவு செய்து "குப்பை இல்லா குமரி கடல்கள் அதை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை" என தூய்மை செய்துவருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ. 


Advertisement

Advertisement