• Oct 13 2024

கேப்டன் மகனை வைத்து நிச்சியம் படம் இயக்குவேன்! இயக்குனர் சசிகுமார் பேட்டி

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் சசிகுமார்  சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 'ஈசன்' என்ற படத்தை இயக்கினார். அதன் பின்னர் நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார். கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான படம் 'நந்தன்'. அந்த படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்தில் சசிகுமார் நடித்துள்ளார். 


இவருடன் இணைந்து இந்த படத்தில் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில், நேர்காணலில் சசிகுமார் விஜயகாந்த் மகன் குறித்து பேசியுள்ளார். இது குறித்து இயக்குனர்களிடம் கதைத்தேன் அவர்களும் ஓகே சொன்னார்கள். அந்த படத்திற்காக சண்முக பாண்டியன் நீளமாக முடியை கூட வளர்த்தார். 


ஆனால், அந்த படம் எடுக்க தாமதமானதால் அவர் படைத்தலைவன் படத்தில் நடிக்க சென்றார். விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது இந்த படத்தை இயக்க திட்டமிட்டேன் ஆனால் முடியவில்லை. சண்முக பாண்டியன் வைத்து கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார். கூடிய விரைவில் சசிகுமார் இயக்கத்தில் சண்முகபாண்டியன் நடிப்பார்என்பதை எதிர்பார்க்கலாம். 


Advertisement