• Sep 19 2024

ராஜ வசூலில் பின்வாங்கும் கோட்.. 400 கோடி பட்ஜெட்டை எட்டினாரா தளபதி?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி நடித்த திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 126 கோடிகளை வசூலித்திருந்தது. மேலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது கோட் திரைப்படம்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கோட் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் காணப்படுவதோடு இதன் ஆரம்ப கட்டத்தில் அண்மையில் மறைந்த விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பத்தின் ஊடாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். 

மேலும் இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், லைலா, சினேகா, வைபவ், மோகன், பிரேம்ஜி, ஜோகி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளார்கள். ஆனாலும் இந்த திரைப்படம் நாளடைவில் வசூலில் டல் அடித்து வருகின்றது.

இந்த நிலையில், உலகளவில் கோட் திரைப்படம் வெளியாகி 11 நாட்களை கடந்த நிலையில் இதுவரை வசூலித்த மொத்த கலெக்சன் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி இந்திய அளவில் கோட் திரைப்படம் சுமார் 212 கோடிகளை வசூலித்துள்ளதாகவும் ஓவர்சீஸ் வசூலில் 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 11 நாட்களில் முடிவில் 360 முதல் 380 கோடி வரை வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் வார வசூல் அறிக்கையை இதன் தயாரிப்பாளர் அறிவித்தது போல தற்போது இரண்டாவது வார வசூல் அறிக்கையையும் அர்ச்சனா வெளியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் இன்னும் அதனையே எட்டவில்லை என அஜித், ரஜினி,சூர்யா ரசிகர்கள் கலாய்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement