• Jan 19 2025

தளபதியை அரசியலுக்கு அழைத்த மதுரை ரசிகர்கள்!மதுரை முழுவதும் வைரலாகியுள்ள சுவரொட்டி..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

நடிப்பில் இளையதளபதியாக மக்கள் மனதி நீங்கா இடம்பிடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்தக் கட்சியின் நிர்வாகிகள் சுவரொட்டி மூலம் தமது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.சில மாதத்திற்கு முன்னர் அரசியலில் தனது கவனத்தை செலுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டிருந்த இவர் தற்போது அவரது முதல் மாநாட்டிற்க்கான வேளைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.குறித்த மாநாடு எதிர்வரும் 27 ஆம் தேதி விக்கிரபாண்டியில் நடைபெறவுள்ளது.


மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் முகமாக தமிழகம் முழுவதும் கட்சி தொண்டர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். மதுரையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மதுரை மாவட்ட தளபதி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


ஏனெனில் கட்சிதலைவர் விஜய் மதுரை மாவட்ட  வடக்கு தொகுதியில் போட்டியிடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த விஜய்யை மதுரை ரசிகர்கள் அரசியல் பக்கம் அழைத்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement