• Jun 23 2024

பிரபு தேவாவின் அடுத்த படத்தின் இசை உரிமையை பெற்றுக்கொண்டது பிரபல இசை மற்றும் தயாரிப்பு நிறுவனம்.

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

நடன இயக்குனர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பல்துறை ஆளுமையான பிரபு தேவா தமிழ் ,இந்தி,தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் முக்கியமாக பணியாற்றியுள்ளார்.நடிகராக தமிழ் படங்களில் பெரிதும் தோன்றும் பிரபு தேவாவிற்கு தனி ரசிகர் படையே உள்ளது எனலாம்.

Prabhu Deva's second wife gets very emotional on his birthday. Watch viral  video - India Today

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து கோர்ட் படத்தில் பணியாற்றி வரும் பிரபு தேவாவின் பேட்ட ராப் படத்தின் போஸ்ட் ப்ரோடக்சன் வேலைகள் நடந்தவாறுள்ளது.எஸ்.ஜே.சீனு இயக்கிய இப் படத்தில்  முக்கிய கதாபாத்திரங்களில் பிரபுதேவா,வேதிகா,சன்னிலியோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

T-Series dethroned by MrBeast on YouTube

ஜோபி.பி.சாம் தயாரித்துள்ள  இப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 31 ஜூலை 2024  திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இப் படத்தின் இசை உரிமையை உலகளவில் பெரிய இசை மற்றும் தயாரிப்பு நிறுவனமான ரி -சீரிஸ் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement