• Dec 13 2024

காளிதாஸின் திருமண நிகழ்விற்கு அஜித்தின் குடும்பத்தினர் பங்கேற்பு..வெளியான புகைப்படங்கள்

Mathumitha / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயராமின் மகனும் பிரபல நடிகருமான காளிதாஸ் ஜெயராம், தனது நீண்டநாள் காதலி தாரிணி காலிங்கராயரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.மிகவும் எளிமையாக திருமணத்தை முடித்த ஜெயராம் குடும்பத்தினர் இப்போது திருமண வரவேற்பு விழாவினை மிக பிரமாண்டமாக நடத்தியுள்ளனர்.


குறித்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு, புதிய ஜோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.


இந்நிலையில் தற்போது காளிதாஸ் ஜெயராம் திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சிக்கு நடிகர் அஜித் அவர்களின் சார்பில் மகன்,மகள் மற்றும் மனைவி ஷாலினி ஆகியோர் கலந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.குறித்த நிகழ்வில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement