• Jan 19 2025

25 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு, இன்று நனவாகிறது! விஷால் வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், வினய்  உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

துப்பறிவாளன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

ஆனாலும் விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே திடீரென ஏற்பட்ட மோதலால் இருவரும் விலகி விட்டார்கள். சில நாட்களின் பின் அந்த சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.


இதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கப் போவதாக அறிவித்து சில ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவர் நடித்த ஏனைய படங்கள் திரைக்கு வந்துவிட்டது. விஷால் இறுதியாக நடித்த மார்க் அன்டனி  திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூலில் சாதனை படைத்திருந்தது.


இந்த நிலையில், தற்போது டோக்கியோ, அஜர்பைஜான் மற்றும் மால்டா ஆகிய நாடுகளில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப் போவதாகவும், மிஷ்கின் சாரின் ஆசியுடன் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் வெளியிட்ட வீடியோவில்,  25 வருடங்களாக இயக்குனராக வேண்டும் என்பதுதான் எனது கனவு. அதை விட்டு நடிகனாக மாறிவிட்டேன். ரசிகர்களின் அன்பு எனக்கு இத்தனை வருடங்கள் கிடைத்திருக்கு. அதற்கெல்லாம் ரொம்பவே பொறுப்புடன் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வெளியிடப் போவது தான் எனது லட்சியம்.. என தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார் விஷால்.


Advertisement

Advertisement