• Sep 07 2024

முடிவுக்கு வருகிறது பிரபல சீரியல்.. இப்ப தான நடிகையை மாத்தினாங்க..!

Sivalingam / 4 weeks ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த பிரபல சீரியல் திடீரென முடிவுக்கு வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல் ஆகியவைகளில் போட்டி போட்டுக் கொண்டு தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன என்பதும், இந்த மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு இடையே தான் டிஆர்பி போட்டி அதிகம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜீ தமிழ் சேனலில் பகல் நேரத்தில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி   வரும் சீரியல் ’இந்திரா’. இந்த தொடரில் ஃபெளசில் ஹிதாயத் நாயகியாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக அக்ஷய் கமல் நடித்து வருகிறார். இந்திரா - காவியா என்ற நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட இந்த சீரியலில் திருமணத்திற்கு பிறகு தனது மருமகள் காவியாவிடம் மாமியார் ஜெயலட்சுமி வரதட்சணை கேட்கும் நிலையில் அதற்கு எதிராக காவியாவின் சகோதரி இந்திரா நிற்கிறாள்.



ஆனால் எதிர்பாராத விதமாக ஜெயலட்சுமியின் இன்னொரு மகனை இந்திரா திருமணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பிறகு நடக்கும் திருப்பங்கள் தான் இந்த சீரியலின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காவியா என்ற கேரக்டரில் நடித்து வந்த நடிகை மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக வேறொரு நடிகை இணைந்த நிலையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் கிளைமாக்ஸ் காட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் 'இந்திரா’ தொடரை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement