• Jan 19 2025

ஜீ தமிழ் 2 சீரியல் நாயகன்கள் விலகுகிறார்களா? காரணம் விஜய் டிவியா? ஆரம்பித்தது அக்கப்போர்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு சீரியலின் நாயகன்கள் திடீரென விலக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் விலகுவதற்கு விஜய் டிவி தான் காரணம் என்று கூறப்படுவதை எடுத்து ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி இடையே அக்கப்போர் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு மட்டுமே போட்டி அதிகமாக இருந்தது என்பதும் விஜய் டிவியில் உள்ளவர்களை சன் டிவி இழுப்பதையே வழக்கமாக கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது.



இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி ஜீ தமிழ் சேனலில் ’இந்திரா’ என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் அக்ஷய் கமல் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டுள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் நடிக்க இருப்பதால் அவர் ஜீ தமிழ் ’இந்திரா’ சீரியலில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர் விரைவில் ரசிகர்களிடம் இதுகுறித்து பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’சண்டக்கோழி’ தொடரின் நாயகன் நியாஸ் கான் விரைவில் விலகுவதாக தெரிகிறது. ’சண்டக்கோழி’ சீரியலில் விக்ரம் என்ற கேரக்டரில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக ’பூவே பூச்சூடவா’ மதன் இந்த கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் நியாஸ் கான்  விரைவில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Advertisement

Advertisement