• Feb 12 2026

வாரணாசி படத்திற்காக IMAX முன் தர்ணா செய்வேன்.. இயக்குநர் ராஜமௌலி பகீர்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழும் எஸ்.எஸ். ராஜமௌலி, தற்போது தனது அடுத்த மிகப்பெரிய படைப்பான ‘வாரணாசி’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். ‘பாகுபலி’, ‘ஆர்.ஆர்.ஆர்’ போன்ற உலகளாவிய வெற்றிகளை தொடர்ந்து, ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய படம் மீதும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.



‘வாரணாசி’ திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக, பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் புகழ்பெற்ற நடிகை ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாரன் நடிக்கிறார். இந்த நட்சத்திர கூட்டணி காரணமாகவே, படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் இயக்குநர் ராஜமௌலி அளித்த ஒரு பேட்டியில், ‘வாரணாசி’ திரைப்படம் மற்றும் இந்தியாவில் உள்ள IMAX திரைகள் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில்,“வாரணாசி படம் வெளியாவதற்குள் இந்தியாவில் போதிய IMAX திரைகள் உருவாகும் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ராஜமௌலி அளித்த பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.

அவர் கூறியதாவது,“இந்தியாவில் தர்ணா என்ற முறை உண்டு. நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்டவர்கள் இடத்திற்கு முன்பு சென்று போராட்டம் நடத்துவது. அதே மாதிரி, லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் IMAX அலுவலகம் முன் போய் தர்ணா பண்ணி, இந்தியாவில் நிறைய IMAX திரைகள் உருவாக்க சொல்லி கேட்பேன்.” என்று கூறினார்.

Advertisement

Advertisement