• Feb 12 2026

நிலாவை வைத்து மனோஜை மடக்கிய ரோகிணி… மீண்டும் முத்து மீது குற்றம் சாட்டிய அருண்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், செல்வத்தை ஜாமினில் எடுப்பதற்காக மீனாவும் முத்துவும்  வக்கீலை சந்திக்கின்றனர். செல்வத்தை ஜாமினில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக வக்கீல் நம்பிக்கை அளித்து அவர்களை அனுப்பி வைக்கிறார்.

மற்றொரு பக்கம், செல்வத்தின் மனைவி அருணின் வீட்டிற்குச் சென்று அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார். ஆனால் அருண் எதையும் கேட்காமல், அவருடன் வந்தவர்களுடன் சண்டைக்கு செல்கிறார். வீதியில் சண்டை நடந்து கொண்டிருக்க, அங்கு வந்த முத்துவும் மீனாவும் அதை தடுக்கின்றனர். அதற்கும் அருண், 'இதெல்லாம் உன்னோட பிளான்தானே? அவர்களை முன்னுக்கு அனுப்பிவிட்டு பின்னாடி வாரியா? என்று முத்து மீது மீண்டும் குற்றம் சாட்டுகிறார்.

இதையடுத்து, செல்வத்தை ஜாமினில் எடுப்பதற்காக வக்கீலிடம் பேசி விட்டதாக கூறி, செல்வத்தின் மனைவியை முத்து சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்புகிறார்.


இன்னொரு பக்கம், ரோகிணி மனோஜுக்கு போன் செய்கிறார். முதலில் அழைப்பை எடுக்க மறுக்கும் மனோஜ், பின்னர் போனை எடுக்கிறார். மனோஜ் பேசாமல் இருந்தாலும், நிலாவை முன்வைத்து உருகி உருகி பேசும் ரோகிணியின் வார்த்தைகள் மனோஜை கலங்க வைக்கின்றன. ஆனால் இறுதியில் மனோஜ் போனை கட் செய்து விடுகிறார்.

இறுதியில், ரவி வீட்டிற்கு வந்து முத்துவிடமும் மீனாவிடமும் மன்னிப்பு கேட்டு, தான் செய்த தவறை நினைத்து மனம் வருந்துகிறார். இதுதான் இன்றைய எபிசோட் .

Advertisement

Advertisement