• Apr 17 2026

சம்பவம் லோடிங்.. "D55" படத்தில் இணைந்த மலையாள சூப்பர்ஸ்டார்.! வைரலான கிளிக்ஸ்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் தொடர்ந்து மாஸ், ஆக்ஷன், காமெடி படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்துவருகிறார். இவர் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இணையும் புதிய திரைப்படத்திற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். தற்காலிகமாக ‘D55’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், தினமும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றது.


‘D55’ படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி படத்தை பெரிய அளவில் ஆக்ஷன் அதிரடி படமாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் வித்தியாசமான மற்றும் கவர்ச்சிகரமான ஆக்ஷன் திரை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்திற்கான இசை அமைப்பாளராக சாய் அபயங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  அத்துடன், ‘D55’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி நடிக்கின்றனர். 

மேலும், இந்த படத்தில் மெகாஸ்டார் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் பெரும் பிரபலத்தையும் ரசிகர் ஆதரவையும் பெற்றவர் மம்மூட்டி, தனுஷ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியுடன் சேருவதனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். அத்துடன், பூஜை விழா இன்று நடைபெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement