• Mar 25 2026

14 ஆண்டுகள் சினிமா பயணம்… சிவகார்த்திகேயனை வாழ்த்திய மனைவி ஆர்த்தி.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மற்றும் குழந்தைகளின் மனதைக் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், இன்றுடன் தனது சினிமா பயணத்தில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். நகைச்சுவை நடிகராக தொடங்கி, ஹீரோவாக வளர்ந்து, இன்று மாஸ் ஹீரோவாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அவரது இந்த பயணம் பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக பார்க்கப்படுகிறது.


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே பிரபலமான சிவகார்த்திகேயன், அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு பெற்று, மெதுவாக தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். ஆரம்ப காலங்களில் காமெடி மற்றும் துணை நடிகர் கதாபாத்திரங்களில் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் டைமிங் காமெடியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பின்னர் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒரே நேரத்தில் கவரும் நடிகராக அவர் மாறினார். காமெடி, எமோஷன், ஆக்ஷன் என அனைத்து வகை கதாபாத்திரங்களையும் ஏற்றுக்கொண்டு நடித்ததன் மூலம், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்தார்.

இன்று சிவகார்த்திகேயன் சினிமாவில் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதனை கொண்டாடும் விதமாக அவரது குடும்பத்தினரிடமிருந்து வந்த வாழ்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அவரது மனைவி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அவரது மகனும் கேமராவுக்கு போஸ் கொடுத்துள்ளார். தந்தை–மகன் இணைந்த அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 

Advertisement

Advertisement