• Apr 15 2026

சிம்பு ரசிகர்களே பொறுத்திருங்க.. இயக்குநர் அஷ்வத் வெளியிட்ட அதிரடியான அப்டேட்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிம்புவின் (STR) பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இயக்குநர் அஷ்வத் ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, சிம்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடிகர் சிம்புவின் பிறந்தநாள் என்பதால், திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், STR 51 படத்தின் இயக்குநரான அஷ்வத் வெளியிட்ட வாழ்த்து செய்தியும், அதனுடன் இணைந்த அப்டேட்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இயக்குநர் அஷ்வத் தனது வாழ்த்து செய்தியில்,“பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிம்பு. இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகிறது.‘அரசன்’ முடித்து நம்முடைய படத்தை தொடங்க ஆவலுடன் உள்ளேன். சிம்பு ரசிகர்களே கொஞ்சம் பொறுத்துக்கோங்க. உங்களுக்காகவே ஒரு எண்டெர்டெயினிங் படம் வரப்போகிறது. அதன் தலைப்பு ' I ' இல் தொடங்கும்." என்று குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம், தற்போது சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படப்பிடிப்பு முடிவடைந்ததும், STR 51 திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவல், படத்தின் அப்டேட்டுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement