• Feb 12 2026

அரசியல் தலைவரா இருந்தாலும்.. மக்கள் டான்ஸராத் தான் பார்ப்பாங்க.! விஜய் குறித்து குஷ்பு

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த குஷ்பு, தற்போது நடிகையாக மட்டுமல்ல, அரசியலிலும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் திறமையை காட்டி வருகிறார். சமீபத்திய நேர்காணல் மற்றும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குஷ்பு, முன்னணி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜய்யைப் பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.


குஷ்பு கூறியதாவது, “விஜய் அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும், மக்கள் அவரை முதலில் ஒரு நடிகர், ஒரு டான்ஸராகவே பார்க்கிறார்கள். திரையுலகில் அவர் செய்த சாதனைகள், அவரது நடிப்பு திறமை மக்கள் மனதில் நிலைத்துவிட்டது." என்றார். 

விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். தனது தனித்துவமான நடிப்பு, மற்றும் திரையரங்குகளில் mass appeal கொண்ட நடனம் என்பன அவரை ரசிகர்கள் மனதில் இடம் பெறச் செய்துள்ளது.

 குஷ்பு குறிப்பிட்டது போல, இவரின் அரசியல் செயல்பாடுகள் முக்கியமானதாய் இருந்தாலும், திரையுலகில் அவர் கொடுத்த பங்களிப்பு மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement