தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் சாந்தனு நீண்ட நாள் காதலியான கிகியை திருமணம் செய்து கொண்டதிலிருந்து, இந்த நட்சத்திர ஜோடி ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுவருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள், தங்களது வாழ்க்கை தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவது வழக்கம்.

இந்நிலையில், சமீபகாலமாக சாந்தனு மற்றும் கிகி இருவரும் எதிர்கொண்டு வரும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர். குறிப்பாக, திருமணம் ஆன பிறகு தொடர்ந்து கேட்கப்படும் “எப்ப குட் நியூஸ்?” என்ற கேள்வி குறித்து அவர்கள் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கிகி, “கல்யாண விசேஷங்களுக்குப் போனால் ,'எப்ப குட் நியூஸ்' என்று கேட்பது வழக்கமாகிவிட்டது. குழந்தை பிறப்பது எங்கள் கையில் இல்லை. நாங்கள் குழந்தை வேண்டாம் என்றும் முடிவு செய்யவில்லை. சமூக வலைத்தளங்களில் சிலர் அக்கறையாக கேட்டாலும்.... இன்னும் சிலரோ 'குழந்தை கூட பெத்துக்க முடியலையா?' என ஏளனமாகப் பேசுகிறார்கள். அது உண்மையிலேயே கஷ்டமாக இருக்கு. தயவுசெய்து எங்கள் சூழலைப் புரிந்து கொள்ளுங்கள். இனிமேல் திரும்ப திரும்ப அதையே கேட்காதீர்கள்.” என்று தெரிவித்துள்ளனர்.
திருமணம் ஆன ஒவ்வொரு தம்பதியினரும் இந்தக் கேள்வியை எதிர்கொள்வது சமூகத்தில் சாதாரணமாகிவிட்டாலும், அது அவர்களது மனநிலைக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பலர் சிந்திப்பதில்லை என்பதே இவர்கள் முன்வைக்கும் முக்கியமான கருத்தாக இருக்கிறது.
Listen News!