• Apr 17 2026

அடேங்கப்பா..!! பிக் பாஸ் 9 போட்டியாளர்களின் வைரல் க்ளிக்ஸ்.. ஆனா அவங்க மட்டும் மிஸ்ஸிங்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ரியாலிட்டி நிகழ்ச்சி கடந்த ஆண்டு  ஆக்டோபர் 5ம் தேதியன்று பிரமாண்டமாக தொடங்கி, சுமார் 105 நாட்களைக் கடந்து 18 ஜனவரி 2026 அன்று கிராண்ட் ஃபினாலேயுடன் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்ட் செய்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.  

இந்த சீசனில் திவ்யா கணேஷ் வெற்றி பெற்று பிக் பாஸ் 9 வின்னராக டைட்டிலை தட்டி தூக்கியுள்ளார். அவருக்கு மொத்தமாக ரூ.50 லட்சம் ரொக்கத் தொகை மற்றும் சொகுசு கார் போன்ற வெகுமதிகள் வழங்கப்பட்டன.   இரண்டாம் இடத்தில் சபரிநாதன் வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள்  பல ஊடகங்களிலும் பேட்டி கொடுத்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் அடிக்கடி  சக போட்டியாளர்களை சந்தித்து  தங்களுடைய அன்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். 


அந்த வகையில் மீண்டும் பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அவர்களுடன்  பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களும்  சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

எனினும்  இறுதியாக பிக் பாஸ்  சீசன் 9 போட்டியாளர்கள்  இணைந்து எடுத்த போட்டோவிலும்  பார்வதியை காணவில்லை.  ஆனால் கம்ருதீன் கானா வினோத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement