• Apr 16 2026

வீல்சேரில் அமர்ந்தபடி நடனமாடிய வில்லன் நடிகர் பொன்னம்பலம்.! பலரும் கண்கலங்கிய சம்பவம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான உடலமைப்பு, கம்பீரமான குரல் மற்றும் தனக்கே உரித்தான வில்லன் நடிப்பால் புகழ்பெற்றவர் நடிகர் பொன்னம்பலம். 

1990-களில் தமிழ் திரைப்படங்களில் அறிமுகமான அவர், ஆக்ஷன் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு புதிய அடையாளம் கொடுத்தார். குறிப்பாக ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த வில்லன் கேரக்டர்கள்  ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்றது.

முத்து, அருணாச்சலம், நாட்டாமை, படையப்பா, பாட்ஷா போன்ற பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் வில்லன் நடிகராக உறுதியான இடத்தை பிடித்தார். திரையில் கடுமையான வில்லனாக தோன்றினாலும், உண்மையில் மிக எளிமையான மனிதர் என அவருடன் பணியாற்றிய பலரும் கூறியுள்ளனர்.

சினிமாவுக்கு முன்பு, பொன்னம்பலம் ஒரு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராகவும், உடற்பயிற்சி பயிற்சியாளராகவும் இருந்தார் என கூறப்படுகிறது.. அதுவே அவரது உடலமைப்புக்கும் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பெரிய பலமாக அமைந்தது. 

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத வில்லன்   நடிகர் பொன்னம்பலம்  நடக்க முடியாத நிலையிலும், வீல்சேரில் அமர்ந்தபடி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலி இருந்தாலும் மன உறுதி குறையவில்லை… உடல் தளர்ந்தாலும் கலைத் துடிப்பு தளரவில்லை என்பதற்கான உதாரணமாக அவர் தற்போதும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement