• Feb 12 2026

கிளாமர் லுக்கில் இணையத்தை கலக்கிய மாளவிகா மோகனன்.. இன்ஸ்டாவில் லீக்கான ஸ்டீல்கள்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகை மாளவிகா மோகனன் தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கவர்ச்சியான உடையில், ஸ்டைலிஷான போஸ்களுடன் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக, அவரது ஸ்டைல், உடை தேர்வு மற்றும் கான்ஃபிடென்ஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மாளவிகா மோகனன் தனது திரைப் பயணத்தை முதலில் மலையாள திரைப்படம் ஒன்றில் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும், அவரது திறமை மற்றும் ஸ்க்ரீன் பிரசென்ஸ் மெதுவாக கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனனுக்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது, இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம். அந்தப் படத்தில் அவர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும், அவரது தோற்றமும் நடிப்பும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.

பேட்ட படத்திற்குப் பிறகு, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் மாளவிகா மோகனன். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, அவரது ஸ்டைலிஷ் லுக் மற்றும் நடிப்புத் திறன் பேசுபொருளானது.

அதனைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் அவர் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாக கலவையான வரவேற்பை பெற்றாலும், மாளவிகாவின் நடிப்பு கவனிக்கத்தக்கதாக இருந்தது.

அத்தகைய நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் பகிர்ந்துள்ள கவர்ச்சியான உடையிலான புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மாடர்ன் லுக்குடன், ஸ்டைலிஷான போஸ்களில் எடுத்த இந்த புகைப்படங்கள், அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல், நெட்டிசன்களையும் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement