• Feb 12 2026

"வித் லவ்" படத்தைப் பார்த்து ரஜினி காந்த் கொடுத்த விமர்சனம்.. இன்ஸ்டாவில் வெளியான வீடியோ

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

செளந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் ‘வித் லவ்’. இந்த படத்தை இயக்குநர் மதன் இயக்கியுள்ளார். காதல், உணர்ச்சி மற்றும் குடும்ப பந்தங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், இப்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். 

‘வித் லவ்’ படத்தில் சரவணன், ஆர்ஜே ஆனந்தி, ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளித்து கதையை நகர்த்தியிருப்பது படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ‘வித் லவ்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று பிரத்யேக காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. செலிபிரிட்டி ஷோ நடந்து கொண்டிருந்த நேரத்தில், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென திரையரங்கிற்கு வந்து ‘வித் லவ்’ படத்தை பார்த்தார். இதை யாரும் எதிர்பார்க்காத நிலையில், ரஜினிகாந்த் வந்தது திரையரங்கில் இருந்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

படம் முடிந்த பிறகு, அவர் படக்குழுவினருடன் கலந்துரையாடி, படத்தைப் பாராட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக புதுமுக ஹீரோ அபிஷன் ஜீவிந்தின் நடிப்பையும், படத்தின் உணர்ச்சிமிக்க கதையையும் அவர் பாராட்டியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement