• Feb 04 2026

த.வெ.க விழாவில் வேல்முருகன் பாடிய பாடல் அவமதிப்பா.? காவல் நிலையத்தில் எழுந்த புகார்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் தலைவருமான விஜய், 2024ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக தொடங்கினார். கட்சி தொடங்கிய உடனே மக்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து, கட்சி தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் களத்தில் முன்னேறி வருகிறது.


இந்த சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். 

இந்த விழாவின் போது, பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் மேடையில் ஒரு பாடலைப் பாடினார். அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த விஜய், உற்சாகம் அடைந்து மேடையிலேயே குட்டி நடனம் ஆடியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

விஜயின் இந்த நடன காட்சி வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், விழாவில் பாடப்பட்ட பாடல் தொடர்பாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. வேல்முருகன் பாடிய பாடல், முருகப்பெருமானை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற பக்தி பாடலான “மருதமலை மாமணியே” என்ற பாடலை தவறான முறையில் மாற்றிப் பாடியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, வழக்கறிஞர் குற்றாலநாதன் என்பவர் நெல்லை மாநகர காவல் நிலையத்தில் புகாரை அளித்துள்ளார். அந்த புகாரில், வேல்முருகன் பாடிய பாடல் முருக பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement