• Apr 15 2026

என்னை நோண்ட வேண்டாம்.! சாண்ட்ரா பற்றி ரம்யா ஜோவின் அதிரடி வீடியோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 7-வது சீசனுடன் அவர் விலகிய நிலையில், 8-வது சீசனில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக அறிமுகமானார். 

அக்.5 அன்று பிரமாண்டமாக தொடங்கிய பிக் பாஸ் 9வது சீசனில், 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அதில்  போட்டியாளர் ரம்யா ஜோ தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டு கண் கலங்கியது அனைவரையும் உருக வைத்தது.

நடனக் கலைஞரான ரம்யா ஜோவின் உண்மைப் பெயர் ஸ்டெல்லா. மைசூரைச் சேர்ந்த அவர், பெற்றோர் விவாகரத்தால் 2 வயது முதலே தனது சகோதரிகளுடன் ஆசிரமத்தில் வளர்ந்துள்ளார். படிப்புக்கு பொருளாதார வசதி இல்லாததால், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார். அந்த அனுபவங்களே அவருக்குள் சினிமா கனவுகளை விதைத்ததாக கூறினார்.


ஆசிரமத்தில் தனித்து வளர்ந்ததால், குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததாக அவர் தெரிவித்தார். ஒரு கலைஞராக அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அவரது வேதனை, பார்வையாளர்களின் மனதை நெகிழ வைத்தது.

இந்த நிலையில்,  ரம்யா ஜோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை   வெளியிட்டு அதில் பிரஜின் சாண்ட்ரா பற்றி தெரிவித்துள்ளார். மேலும்  என்னை நோண்ட வேண்டாம் என்று  தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வருகிறது. இதோ அவருடைய வீடியோ. 

Advertisement

Advertisement