• Apr 17 2026

அடேங்கப்பா.! ‘வித் லவ்’ படத்தைப் பார்த்து பிரபலங்கள் சொன்ன ரிவ்யூ என்ன தெரியுமா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துடன் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், தற்போது தனது புதிய படமான ‘வித் லவ்’ மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். காதல், குடும்பம் மற்றும் உணர்ச்சி சார்ந்த கதைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

‘வித் லவ்’ படத்தில் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் காதல், குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கை சம்பந்தமான உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.


படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பிரபலங்கள் பிரத்யேக காட்சிகளை பார்த்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அந்தவகையில், நடிகர் சசிகுமார் “படம் ரொம்ப நல்லா இருந்தது. இரண்டு பேருமே ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. கதையும், காட்சிகளும் மனதை தொட்டு போகும்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் சமுத்திரக்கனி தன் கருத்தில், “ரொம்ப நல்ல படம். குடும்பத்தோட வந்து பாருங்க...” என பரிந்துரைத்தார்.

அதேபோல், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படம் பற்றிப் பேசும்போது, “எனக்கு படம் பிடிச்சிருக்கு.” என்றார். இந்த வகையான விமர்சனங்கள் கிடைத்த பிறகு, திரைப்படம் வெளியான பின் நல்ல வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement