• Feb 12 2026

பெண்கள் நினைத்தால் அதையும் செய்ய முடியும்.! சாய் தன்ஷிகா ஓபன் டாக்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

‘பேராண்மை’ படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்ஷிகா. மேலும் இவர் மாஞ்சா வேலு, கபாலி, இருட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யோகிடா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜப்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரி, ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பெண்களை மையமாகக் கொண்டு ஆக்சன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில், சாய் தன்ஷிகா நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் ஒரு கொலையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.


இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சாய் தன்ஷிகா, கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தபோது என் கதாபாத்திரத்தின் பெயர் யோகி. அதிலிருந்தே ‘யோகிடா’ என்ற டைட்டில் உருவானது. அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு, பெண்கள் முடியை வெட்டிக்கொண்ட அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றார்.

மேலும், பேராண்மை படத்தில் செய்த ஆக்சன் காட்சிகள் இன்று வரை எனக்கு உதவுகின்றன. யோகிடா படத்தில் அனைத்து ஆக்சன் காட்சிகளையும் டூப் இல்லாமல் செய்துள்ளேன். பெண்கள் நினைத்தால் ஆண்களுக்கு சமமாக சண்டை காட்சிகள் செய்ய முடியும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தாண்டி முன்னே வர முடியும் என்பதே இந்த படத்தின் மைய கருத்து என கூறினார்.


Advertisement

Advertisement