• Apr 15 2026

புதிய காதல் மலர்கிறதா? தமன்னாவுடன் நெருக்கம் காட்டும் ஷாருக்கான் மகன்! கிளம்பிய கிசுகிசு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சினிமாவில் பல ஆண்டுகள் சம்பாதித்த வருமானத்தை அதிகரிக்கும் வகையில் பல திரையுலக பிரபலங்கள் தற்போது சைடு பிசினஸ் தொடங்கி வருகின்றனர். 

அந்த வரிசையில் நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தீபிகா படுகோன், ராய் லட்சுமி உள்ளிட்ட பலர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். சிலர் விளையாட்டு துறையில் முதலீடு செய்ய, சிலர் தனியார் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலில் நடிகை தமன்னா மும்பையில் சொந்தமாக ஒரு நகைக்கடை தொடங்கியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் பிரேக்கப் ஆன பின்னர், தமன்னா தனது தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தமன்னாவின் நகைக்கடை திறப்பு விழாவில் காஜல் அகர்வால், சமந்தா, பூஜா ஹெக்டே, சான்யா மல்கோத்ரா, மிருணாள் தாகூர், உள்ளிட்ட பல நடிகைகள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகின.


இந்த நிலையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது பெரும் கவனத்தை ஈர்த்தது. தமன்னாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், இருவரும் நெருக்கமாக பேசும் வீடியோக்களும் இணையத்தில் தீயாய் பரவின. இதனால் புதிய காதல் கிசுகிசுகள் கிளம்பின.

அந்த வகையில், குறித்த நிகழ்ச்சியில் இருவரும் நீண்ட நேரமாக மிக நெருக்கமாகவும், தீவிரமாகவும் உரையாடிக் கொண்டிருந்ததும், தமன்னா பேசுவதை ஆர்யன் கான் மிகவும் கூர்ந்து கவனித்த அந்த பாண்டிங் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் பல யூகங்களை கிளப்பியது.  

இதனால் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறதா? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட தொடங்கியுள்ளனர். 

எனினும், நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ஆர்யான் கான் நட்பு ரீதியாகவே தமன்னாவின் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளனர்.  

Advertisement

Advertisement