• Apr 17 2026

"ஜனநாயகன்" படத்துக்கும் லீடருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.! லெஜெண்ட் சரவணன் விளக்கம்

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திய லெஜண்ட் சரவணன், தற்போது நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் grand-ஆக நடைபெற்றது. ரசிகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழா, மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற்றது.

படக்குழுவினரின் அறிவிப்பில், இந்த புதிய திரைப்படத்தின் தலைப்பு ‘லீடர்’ என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும் ரசிகைகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதே நேரத்தில், படத்தின் டீசரும் விழாவில் வெளியிடப்பட்டது.

டீசர் நிகழ்ச்சியில் பேசிய லெஜண்ட் சரவணன்,விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் ‘லீடர்’ படத்தின் கதையை தொடர்புபடுத்தி எழுந்த கேள்விக்கு பதிலளித்திருந்தார்.  

அதாவது, “ஜனநாயகன் படத்தின் கதைக்கும், லீடர் கதைக்கும் சம்பந்தம் இல்லை. இதனை ஒரு வருடத்திற்கு முன்பே தயார் செய்துவிட்டோம்.” என்று கூறியிருந்தார். 

இதன் மூலம், "லீடர்" தந்தை–மகள் உறவை மையமாகக் கொண்ட கதையைக் கொண்டிருந்தாலும் "ஜனநாயகன்" படத்திலிருந்து வேறுபடுகின்றது என்பதை அறியமுடிகிறது. 

Advertisement

Advertisement