• Feb 04 2026

சரத்குமார் – ராதிகாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்.! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Aathira / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார், 1980-களில் திரைப்படத் துறையில் அறிமுகமாகி, ஆக்ஷன் ஹீரோ மற்றும் குடும்ப நாயகன் என தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். 

இவருடைய நடிப்பில் வெளியான சூரியன், நாட்டாமை, நட்புக்காக, சமுத்திரம் போன்ற பல வெற்றிப் படங்கள் அவரது வாழ்க்கையில் முக்கியமான மைல்கற்களாக அமைந்தன. சரத்குமாரின் வலுவான உடலமைப்பு, நேர்த்தியான நடிப்பு மற்றும் சமூக அக்கறை கொண்ட கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

சினிமாத் துறையில் நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் சரத்குமார் தன்னை நிரூபித்துள்ளார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நிறுவி, அதன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். 

அதுபோல ராதிகாவும்  பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரும் இன்றளவு மட்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.


சரத்குமார் – ராதிகா திருமணம் 2001ஆம் ஆண்டு நடைபெற்றது. இதற்கு முன்பு சரத்குமாருக்கு சாயா என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணத்தில் பிறந்தவர்கள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் பூஜா சரத்குமார்.  அதேபோல், நடிகை ராதிகாவுக்கும் முன்பு திருமணம் நடந்து இருந்த நிலையில், அவர்களுக்கு ரயன் என்ற மகளும் உள்ளார்.

இந்த நிலையில், சரத்குமார் – ராதிகா இன்றைய தினம் தமது திருமண நாளை கொண்டாடுகின்றனர். அதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement