• Mar 26 2026

இளமை திரும்புதே.. காலம் மாறினாலும் குஷ்புவின் அழகு மாறல.. வைரலான லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90-களின் முன்னணி நடிகையாக ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தவர் நடிகை குஷ்பு. தனது அழகு, இயல்பான நடிப்பு என்பன மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் திரையுலகில் உச்சத்தை  தொட்ட நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். 

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட அக்காலத்தின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்த நடிகையாக குஷ்பு பெரும் புகழ் பெற்றார்.


1990-களில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்த குஷ்பு, காதல், குடும்பம், நகைச்சுவை என அனைத்து விதமான கதாபாத்திரங்களையும் எளிதாக ஏற்றுக்கொண்டு நடித்தார். அவரது திரைவருகைக்காக ரசிகர்கள் காத்திருக்கும் அளவுக்கு அவர் புகழ் பெற்றார். 

சினிமாவுக்குப் பிறகும் குஷ்பு தனது கலைப் பயணத்தை நிறுத்தவில்லை. தொலைக்காட்சி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். அவரது நேர்மையான கருத்துகள், நகைச்சுவை கலந்த பேச்சு ஆகியவை டிவி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

நடிகை குஷ்பு சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற தளங்களில் தனது கருத்துகள், குடும்ப தருணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை குஷ்பு தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், அவர் வயதை மீறும் அழகுடன் மிகவும் இளமையாக காணப்படுகிறார். வெளியான போட்டோஸ் இதோ.! 

Advertisement

Advertisement