• Feb 12 2026

கூட்டம் கூடுறது எல்லாம் வாக்காக மாறாது.. விஜய்யின் அரசியல் குறித்து பிரபல வில்லன் பகீர்.!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களில் நடித்த நடிகர் சுமன், தனது திறமையான நடிப்பு மற்றும் திறமையான பொது கருத்துகளால் திரையுலகிலும், சமூக ஊடகங்களிலும் பரிச்சயம் பெற்றவர். சமீபத்தில், தஞ்சாவூரில் உள்ள பிரபல திருநாகேஸ்வரன் கோயிலுக்கு சாமி தரிசனம் சென்ற சுமன், அந்த நேரத்தில் அவரிடம் கேட்கப்பட்ட சில முக்கியமான கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்தார். 


அந்தவகையில் சுமன், விஜய்யின் அரசியல் குறித்து மனம் திறந்து கதைத்துள்ளார். அதாவது, “நடிகர் நடிகைளை காண வரும் கூட்டம் வாக்காக மாறாது. திரையில் பார்த்த நடிகருக்கும் அவரை நேரில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை காண மக்கள் கூட்டம் கூடுவர். இந்த கூட்டம் வாக்காக மாறாது.” என்று வெளிப்படையாக கதைத்துள்ளார். 

இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அத்துடன், நடிகர்களின் அரசியல் வருகைகளைப் பற்றிய கருத்துக்களை சுமன் திறந்த மனதில் பகிர்ந்துள்ளார் என்பதால், அவரது நேர்மை மற்றும் அஞ்சாமை பாராட்டப்படுகிறது.

Advertisement

Advertisement