• Feb 12 2026

'மண்டாடி' படத்திற்காக கடலில் கடும் பயிற்சி எடுக்கும் சூரி.! வீடியோ பகிர்ந்து நெகிழ்ச்சி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் காமெடி கேரக்டர்களில்  மட்டுமே நடித்து வந்த நடிகர் சூரி, தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.. விடுதலை படத்தின் மூலம் தனது நடிப்புத் திறனை நிரூபித்த அவர், தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மண்டாடி’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

மேலும் தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


‘மண்டாடி’ திரைப்படம் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. சுமார் ரூ.75 கோடி செலவில் தயாராகும் இந்த படம், சூரியின் நடிப்பில் உருவாகும் முதல் பிரம்மாண்ட படமாக இருக்கும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. இப்படம் கோடை காலத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மண்டாடி படத்திற்காக கடலில் தீவிர பயிற்சி எடுத்து வரும் வீடியோவை நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “இரத்தம், வியர்வை, தளராத அர்ப்பணிப்பால் எழுதப்படும் ஒரு பயணம்” என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

Advertisement