• Apr 17 2026

நடிக்க ஆசை.! ஆனா, ஹீரோவா வச்சு படம் எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாரு.. நடிகர் ஆகாஷ் பேட்டி.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருந்த ‘சிறை’ திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி, ரசிகர்களிடையே சுவாரஸ்யமான வரவேற்பைப் பெற்றது. இந்த படம் உண்மையான சம்பவங்களைத் தழுவி, இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், தமிழ் எழுதிய கதையுடன் உருவாகியுள்ளது.

‘சிறை’ திரைப்படத்தில் ஆகாஷ் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் சமீபத்திய நேர்காணலில் தனது நடிப்பு குறித்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.


அதாவது, “எனக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது. ஆனா, நடிக்கணும்னு ஆசை. அப்பா கிட்ட போய் சொன்னதும் உன்ன ஹீரோவா வைச்சு படம் பண்ணமாட்டேன். ஆனா,நான் பண்ணுற படத்தில உனக்கு ஏதாவது கரெக்டர் அமைஞ்சா அதுல நீ முயற்சி பண்ணிக்கன்னு சொல்லிட்டார். அப்புறம் தமிழ் சார் அப்பா கிட்ட கதை சொன்னதும் என்கிட்ட வந்து தமிழ் சாரை போய் பார். அவரு ஓகே சொன்னா நீ பண்ணு. ஆனா, அவங்க வேணா சொல்லிட்டா அவங்க சொல்லுறவங்கள தான் நடிக்க வைப்பேன்னு சொல்லிட்டார்.” என்று ஆகாஷ் கூறினார்.

‘சிறை’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் என்பவர், தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற நபராக இருக்கிறார். அவரது மகன் ஆகாஷ், அவரின் வழிகாட்டுதலின் கீழ், படத்தின் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல பாராட்டுகளை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement