• Apr 17 2026

மீண்டும் ஜோடி சேரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் ஸ்டாலின் முத்து – நிரோஷா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’-இல் நடித்து வரும் நடிகர்கள் ஸ்டாலின் முத்து மற்றும் நிரோஷா ஜோடி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர்களின் இயல்பான நடிப்பும், திரையில் காணப்படும் நல்ல கெமிஸ்ட்ரியும் தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் முதல் பாகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகமும் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில், அதில் ஸ்டாலின் முத்து – நிரோஷா ஜோடி முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். குடும்ப உணர்வுகள், உறவுகளின் மூலம் வெளிப்படுத்தும் காட்சிகளில் இருவரின் நடிப்பும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த நிலையில், தற்போது ஸ்டாலின் முத்து மற்றும் நிரோஷா மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை, இருவரும் ஒரு புதிய தொலைக்காட்சி தொடரில் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் விஜய் டிவியில் Non-Prime Time நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தொடர் எப்போது தொடங்கும், அதன் கதை என்ன, இதில் இருவரின் கதாபாத்திரங்கள் எப்படி இருக்கும் என்பவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement