பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி பாண்டியனோட கடைக்குப் போய் தனக்கு இப்ப உடம்பு சரியாகிட்டு என்று சொல்லுறார். பின் கோமதி சரவணனை பார்த்து வெளியில தர்ப்பூசணி ஜூஸ் வாங்கிட்டு வா என்று அனுப்பிவிடுறார். அதைத் தொடர்ந்து கோமதி பாண்டியன் கிட்ட போய் உடம்பு சரியில்ல என்று ஒருத்தி சொல்லுறாளே என்னென்னு கேட்கலாம் தானே என்கிறார்.
மேலும் என்ர மனசில இருக்கிறத எல்லாம் லெட்டரில எழுதிக் கொண்டுவந்திருக்கேன் என்று சொல்லிக் கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து கடைக்கு பொம்பிள ஒராள் வந்து முட்டை இருக்கோ என்று கேட்கிறார். அப்ப பாண்டியன் அந்த லெட்டரில முட்டையை வைச்சுக் கொடுக்கிறார். அதைப் பார்த்த கோமதி லெட்டர் போய்ட்டு என்று சொல்லி அந்த பொம்பிள பின்னாடியே போறார்.

பின் மீனா லெட்டர் கொடுத்திட்டீங்களா என்று கோமதியைக் கேட்க, கோமதி நடந்த எல்லாத்தையும் சொல்லுறார். அதைத் தொடர்ந்து ரெண்டு பேரும் அந்தப் பொம்பிளையை தேடிப் போகிறார்கள். ஒருவழியா ரெண்டு பேரும் ஓடிப்போய் அந்த லெட்டரை வாங்கிறார்கள். பின் கடைக்குப் போன மீனாவைப் பார்த்து பாண்டியன் உன்ன நான் எவ்வளவு நம்பினேன் நீ எல்லா விஷயத்தையும் மறைச்சிட்ட என்கிறார்.
அதைக் கேட்ட மீனா இந்த விஷயம் தெரிஞ்சிருந்தால் நீங்க அத்தையை பேசியிருப்பிங்க என்கிறார். பின் பாண்டியன் லெட்டரை படிச்சுப் பார்க்கிறார். மறுபக்கம் கதிரும் ராஜியும் பீச்சில ஜாலியா கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!