• Jan 19 2025

ரொம்ப தப்பான ஆளுக்கு பிக் பாஸ் டைட்டில் கொடுத்துட்டாங்க... சொன்னது யார் தெரியுமா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இடம் பெற்று வந்த பிரபல ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் சீசன் 7. இதன்  இறுதி அத்தியாயம் இன்றுடன் நிறைவடைந்தது.

அதன்படி பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் ஆக அர்ச்சனாவும், 1ஸ்ட ரன்னரப்பாக மணியும், 2ன்ட் ரன்னரப்பாக மாயாவும், 3இட் ரன்னரப்பாக தினேசும் வெற்றி பெற்று இருந்தனர்.

எனினும், பிக் பாஸ் சீசன் 7ன்  டைட்டில் வின்னர் அர்ச்சனாவுக்கு கிடைத்தது சமூக வலைத்தளங்களில் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


இந்த நிலையில்,  பொது மகள் ஒருவர் அளித்த பேட்டியில், 'தப்பான ஆளுக்கு டைட்டில் கொடுத்துட்டாங்க...''என அதிரடியாக சொல்லி உள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, பிக் பாஸ்  நிகழ்ச்சியில் வழமை போல இறுதியில் பிக் பாஸ் டைட்டிலுக்கு இருவருக்கிடையில் மட்டுமே அதிக போட்டி காணப்படும்.

அதன்படியே பிக் பாஸ் சீசன் 7னிலும் பிக் பாஸ் டைட்டிலுக்கான போட்டியில் அர்ச்சனாவும், மாயாவும் காணப்பட்டனர். அவர்களின் ரசிகர்களும் இணையத்தில் பல்வேறு பிரச்சாரங்களை செய்து வந்தனர்.


பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தவர் தான் விஜே அர்ச்சனா. அதுபோல  தனது நடிப்பின் மூலம் பிரபலமானவர்தான் மாயா. இவர்கள் இருவருக்கும் பிக் பாஸ் வீட்டிற்கு அர்ச்சனா வந்ததிலிருந்தே மோதல் காணப்பட்டது.

அதிலும் பிரதீப்புக்கு ரெட் கார்ட் வழங்கிய விஷயத்தில் அர்ச்சனா ரொம்பவுமே உரிமை குடல் கொடுத்தார். இதன் அடிப்படையில் அர்ச்சனாவுக்கும்,  விசித்ராவுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.


அத்துடன் பிரதீப்புக்கு ரெக்கார்ட் வழங்கிய  சம்பவத்தின் மூலம் தான் மாயாவிற்கும் மக்களின் வாக்குகள் குறைந்தது. அவர் வெறுப்பை சம்பாதித்தார்.

இந்த நிலையில், மாயா வெற்றி பெறுவார் என ஒரு  சாராரும் , அர்ச்சனா  தான் வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சாராரும் தமக்கிடையே போட்டி போட்டு வந்தனர்.


இவ்வாறான நிலையிலேயே, பொதுமகள் ஒருவர் வழங்கிய பேட்டியில், மாயா வெளி உலகத்தில ரொம்ப நல்ல கேரக்டர். பிக் பாஸ் வீட்டிற்கு உள்ள போன படியா தான் அவர்களை ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க. மத்தபடி அவங்க ரொம்ப ஹெல்ப் பண்றவங்க எல்லாருக்கும். அவங்க ரொம்ப பேர சிரிக்க வச்சு பாக்குறாங்க. ஆனாலும் அவங்கள நிறைய பேர் குறை சொல்லி பாக்குறாங்க.. ஆனா இருக்குறதிலேயே மாயா தான் பெஸ்ட் என கலக்கத்தோடு சொல்லி உள்ளார்.


Advertisement

Advertisement