• Jan 18 2025

வாய்ப்பு கேட்டா கட்டிப்பிடிச்சு முத்தம் தருவாரு... மாயாவுக்கு இதனால தான் பிக் பாஸ் கிடைச்சது! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வனிதா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 வெற்றிகரமாக நிறைவடைந்ததோடு,  இதன் வின்னராக  அர்ச்சனா  வெற்றி வாகை சூடியுள்ளார்.

இந்த நிலையில், பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் கமல்ஹாசன் தொடர்பில் சர்ச்சைப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி திறமையுள்ளவர்களை தெரிந்தெடுத்து, அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பை வாரி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதாகும். 


எனினும், பிக் பாஸில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வாய்ப்பு தருவதாக கமல்ஹாசன் பேச்சுக்கு மட்டுமே சொல்வார். இவ்வாறு வாய்ப்பைக் கேட்டு அவரிடம் சென்றால் கட்டி அணைத்து முத்தம் மட்டுமே கொடுப்பார் என அண்மையில் வனிதா விஜயகுமார் பேசியது தற்போது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவர் கூறுகையில், பிக் பாஸ் ஒரு பெரிய மேடை நிகழ்ச்சி. அது 100 நாட்கள் வரை நடைபெறுவதால் மக்கள் போட்டியாளர்களின் திறமையை நேரடியாகவே பார்க்கின்றனர். இவர்கள் பிக் பாஸ் போட்டியில் வெற்றி பெற்றாலும், இல்லை என்றாலும் பிக் பாஸ் பிரபலங்கள் என்றே  அறியப்படுவார்கள்.


இவ்வாறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றும் போட்டியாளர்களுக்கு, ஒவ்வொரு சீசனிலும் அவர்கள் பிக் பாஸில் இருந்து வெளியேறியதும் அவர்களுக்கு  அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று கமல்ஹாசன் சொல்லி வருகிறார்.

ஆனால் அப்படி அவர் யாருக்கும் வாய்ப்பு கொடுக்க மாட்டார். பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட எனக்கு, கமல் சாரின் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர் எனக்கு கட்டிப்பிடித்து முத்தமே கொடுத்தார். இதுவரையில் எந்த ஒரு வாய்ப்பும் எனக்கு  கமல் சார் தரவில்லை.


அடுத்து பிக் பாஸ்  சீசன் மூன்றில் பங்கு பற்றிய தர்ஷனுக்கு டைட்டில் கிடைக்கவில்லை ஆனாலும் தனது படத்தில் ஹீரோ ஆக்குகிறேன் என்று கமல் வாக்கு கொடுத்தார். ஆனால் இதுவரையில் தர்ஷனுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை.

அதுபோலத்தான் அடுத்த பிக் பாஸ் சீசன்4ல்  போட்டியாளராக கலந்து கொண்ட ஷிவானியை விக்ரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் நடித்த மைனா மற்றும் மகேஸ்வரிக்கு அடுத்த சீசனில் வாய்ப்பு கொடுத்தார்.

இதை தொடர்ந்து, விக்ரம் மற்றும் லியோ படத்தில் நடித்த மாயாவுக்கும் இந்த சீசனில் வாய்ப்பு கிடைத்தது. என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார்.

Advertisement

Advertisement