• Dec 07 2024

வீடியோ போட்டே நிறைய சம்பாதிச்சிட்டாங்க..! மணிமேகலையின் முகத்திரையை கிழித்த பிரபலம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலைக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கான முடிவை மணிமேகலை இடம் ஏற்படுத்தியது. பணம், புகழைக் காட்டிலும் சுயமரியாதை தான் முக்கியம் என்று மணிமேகலை அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருந்தார்.

இதை தொடர்ந்து இதற்கு காரணம் பிரியங்கா தான் என அனைத்து தரப்பிலும் இருந்து மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வருகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் பிரியங்கா பக்கத்தில் உள்ள நியாயத்தையும் எடுத்துக் கூறி வருகின்றனர். தன்னுடன் நெருங்கி பழகிய சிலர் தனக்கு எதிராக பேசியுள்ளதாக கூறிய மணிமேகலை, அவர்களை சொம்பு என தெரிவித்துள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பற்றிய சரத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், இந்த விஷயம் நாட்டிற்கு தேவை இல்லாத பிரச்சனை. சில ஈகோ பிரச்சனைகளால் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் நாம் தலையிடுவது சரி இல்லை. மேலும் இதில் நாம் ஏதாவது கருத்து கூறினால் நமக்கு சொம்பு என்ற பெயர்தான் கிடைக்கும்.


இதன் மூலம் அவர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் மணிமேகலைக்கு எதிராகவும் பேசியுள்ளார் என தெரிகின்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆதாயம் தேடும் வகையில் வீடியோ வெளியிட்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்கள் அதிகமாக சம்பாதித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதை வெளியில் இருந்து பார்க்கும் நாம் தான் ஏமாளிகளாக மாறி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் தன்னை மறந்து விட்டார் என்பதற்காக கூட இந்த மாதிரி எல்லாம் பேசி இருக்கலாம் என்று மணிமேகலையின் பெயரை சுட்டிக்காட்டாமல் சரத் பேசியுள்ளார். தற்போது இவர் பேசிய வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement