விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயின் மீது திருநங்கை வைஷு என்பவர் சமீபத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில் தான் நாஞ்சில் விஜயுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், அவர் தன்னை காதலித்ததாகவும், தற்போது மனைவி குடும்பத்திற்காக தன்னை ஒதுக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனை மறுத்த நாஞ்சில் விஜயன் தான் வைஷுவை ஒரு நண்பராக மட்டுமே பார்த்தேன். ஆனால் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாகத்தான் விலகினேன். அவர் நள்ளிரவில் தொடர்ச்சியாக அழைப்புகள், மெசேஜ்கள் மூலம் தொந்தரவு செய்தார். அதன் பின்பு அவரை பிளாக் பண்ணினேன் என்று தெரிவித்தார்.
மேலும் நாஞ்சில் விஜயனும் அவருடைய மனைவியும் வைஷு எதற்காக இப்படி பண்ணுறாங்க என்று தெரியவில்லை. நான் உங்களை தங்கை மாதிரி தான் பார்த்தேன் என்று உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதன் பின்பு வைஷு தான் கொடுத்த போலீஸ் புகாரை வாபஸ் வாங்கினார்.
அதே வேளை விஜே வைஷுவின் நண்பரான ஜாஸ்மின், வைஷு பிக்பாஸ் ஆரம்பம் ஆகும் கால கட்டத்தில் இப்படி எல்லாம் பண்ணுவாங்க. நாஞ்சில் விஜயனும் வைஷுவும் பிரதர் சிஸ்டர் டைப் தான் என்று தெரிவித்திருந்தார் .
இந்த நிலையில், நாஞ்சில் விஜயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜே வைஷு .
இதை பார்த்த ரசிகர்கள் வைஷுவைத் திட்டி தீர்ப்பதோடு, சரக்கு போட்டா சின்னப்புள்ளத்தனமா ஏதாவது பண்ணத் தோணுமா? என்று கமெண்ட் பண்ணி உள்ளனர். மேலும் நாஞ்சில் விஜயன் நல்லவர் என்று அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!