நடிகை ராதிகா, நடிகை நிரோஷாவின் தாயாரான கீதா ராதா வயது மூப்பின் காரணமாக நேற்றைய தினம் காலமானார். இவர் மறைந்த நடிகர் எம். ஆர் ராதாவின் மனைவி ஆவார். தற்போது இவருடைய உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
பலரும் ராதிகாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நேரிலே சென்று தமது ஆறுதலை தெரிவித்து வருகின்றார்கள். ராதிகாவின் தாயாருடைய உடல் இன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் தகனம் செய்யப்பட உள்ளது.
ராதிகா தனது தாயாரின் மறைவு தொடர்பில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோவுக்கு பிரபலங்கள் பலரும் கமெண்ட் செக்ஷனில் ஆறுதல் தெரிவித்து வருகின்றார்கள்.
அதேபோல அவருடைய மகளும், தனது அம்மம்மா மிகவும் அற்புதமானவர்.. அவர் ஒரு போராளி.. தனது குழந்தைகளையும் பேரப்பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தார் என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது ராதிகாவின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் ராதாரவி, பிரபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் சென்றுள்ளனர். இதன்போது ராதிகா அழுது புலம்பிய காட்சிகள் பார்ப்போரின் கண்களை நனையச் செய்துள்ளன.
Listen News!