வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் தான் வாடிவாசல். இந்த திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது.
இதைத்தொடர்ந்து வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதில் இருந்து சூர்யா காளையுடன் நின்று எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது.
எனினும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது என்றும், சூர்யா படத்தில் இருந்து விலகிவிட்டார் என்றும், பல்வேறான அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஒரு கட்டத்தில் இந்த படம் தொடர்பிலான அப்டேட் இல்லாத காரணத்தினால் படம் கைவிடப்பட்டதாகவும் பேசப்பட்டது.
இந்த நிலையில், சிம்புவின் 49 ஆவது படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த கையோடு வாடிவாசல் படத்திற்கான சூட்டிங் ஆரம்பம் ஆகின்றது. இந்த படத்தை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் திரையில் பார்க்கலாம் என சித்ரா லட்சுமணன் தகவல் தெரிவித்துள்ளார்.
Listen News!