• May 13 2025

அருணால் மீனா முத்துவுக்கிடையே ஏற்பட்ட விரிசல்..! கேள்விக்குறியாகுமா சீதாவின் காதல்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சீதா அருணிடம் மீனா பூ டெகரேஷனுக்கு பணம் இல்லாமல் இருக்கிறாள் அதுதான் உங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் யாருகிட்டயும் பணம் இருந்தால் கடனா வாங்கித் தருவீங்களா என்று கேக்கிறார். அதைக் கேட்ட அருண், நான் யாருகிட்டயும் கடனா பணம் வாங்குறேல என்று சொல்லுறார். அதுக்கு சீதா சரி பரவாயில்ல நான் வேறயாருகிட்டயும் கேட்டுப் பாக்கிறேன் என்று சொல்லுறார்.

அதனைத் தொடர்ந்து அருண் அந்தப் பணத்தை தானே தாறேன் என்று சொல்லுறார். மேலும் உன்னோட குடும்பத்தையும் என்னோட குடும்பமாகத் தான் நினைக்கிறேன் என்று சொல்லுறார். இதனை அடுத்து சீதா அந்தப் பணத்தை அருணிடமிருந்து வாங்க சம்மதிக்கிறார். பின் மீனா முத்து குடிச்சிட்டு சண்டை பிடிச்சதப் பற்றி ரவிக்குச் சொல்லுறார்.


அதைக் கேட்ட முத்து தன்னில எந்தத் தப்பும் இல்லை எல்லாத்துக்கும் காரணம் அந்த பொலிஸ் தான் என்று சொல்லுறார். மேலும் மீனாவப் பாத்து எல்லாரு முன்னாடியும் அசிங்கப்படுத்திற என்று சொல்லுறார் முத்து. அதைக் கேட்ட ரவி அண்ணி வந்ததுக்குப் பிறகு தான் நீ ஒழுங்கா இருக்கிற அவங்களைப்  பேசாத என்று சொல்லுறார்.

இதனை அடுத்து சீதா கடனுக்குப் பணம் வாங்கியிருப்பதனைக் கேட்ட மீனா ரொம்பவே கவலைப்பட்டு கண் கலங்குகின்றார். பின் ரெஸ்டாரெண்டுக்கு வந்த ரெண்டு பேர் ஸ்ருதியிடம் தப்பாக நடந்து கொள்ளுகிறார்கள். அதற்கு ஸ்ருதி அவங்க ரெண்டு பேருக்கும் மிளகாப் பொடி போட்ட சூப் குடிக்கக் கொடுக்கிறார். அதைப் பாத்த ரெஸ்டாரெண்ட் ஓனர் ஸ்ருதியிடம் கோபம் கொள்ளுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement