தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா தற்போது சில சிக்கல்களால் தனது படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வைரலாகியுள்ளன. குறிப்பாக, மண்ணாங்கட்டி , ராக்காயி மற்றும் மூக்குத்தி அம்மன் 2 எனப்பல படங்கள் தயாராக இருந்தாலும் அவற்றுள் எந்தப் படம் முதலில் திரையரங்கில் வெளிவரும் என்பது பற்றிய கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் சில முக்கிய படங்கள் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் திகதியை அடைய முடியாமல் தவித்து வருகின்றன. குறிப்பாக, மண்ணாங்கட்டி படம் கடந்த ஆண்டு படப்பிடிப்பை முடித்திருந்தாலும், ஏதோ ஒரு பிரச்சினையால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. மேலும் ராக்காயி படம் தயாரிப்பு நிறுவனத்திற்கும் விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக இப்படம் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது.
சினிமா உலகில் ஒரு படம் தயாராகிவிட்டால் அதை வெளியிட பல்வேறு காரணங்கள் தடையாக இருக்கலாம். நயன்தாராவின் படங்களும் இதற்கு விதிவிலக்காக இல்லை என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். நயன்தாரா இந்த நிலைமை குறித்துப் பேசும்போது, “எந்தப் படம் முதலில் வர வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் முடிவாக இருக்கும். எனது கடமை நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதில் நடிப்பதே என்றார். ஆனால், சில நேரங்களில் நான் நடித்த படங்கள் சில எதிர்பாராத பிரச்சனைகளில் மாட்டிக்கொள்வது வருத்தம் அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
தற்போது எந்தப் படம் முதலில் திரைக்கு வரும் என்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அத்துடன் தயாரிப்பு நிறுவனங்களும் விநியோகஸ்தர்களும் விரைவில் முடிவெடுத்து, நயன்தாராவின் படங்களை ரசிகர்கள் பார்ப்பதற்காக திரையில் வெளியிட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Listen News!