• Dec 17 2025

"பராசக்தி" படத்தின் கதை இதுதானா.? லீக்கான தகவல்களால் குஷியில் ரசிகர்கள்.!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் சமீபத்தில் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள் பெரும் கவனத்தை பெற்று வருகின்றன. அந்த வகையில், இயக்குநர் சுதா கொங்கரா புதிய முயற்சியாக உருவாக்கிய படம் தான் ‘பராசக்தி’. 


இந்த படத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து, படத்தை முழுமையாக உணர்வுபூர்வமாக உருவாக்கியுள்ளார்.

படக்குழுவின் தகவலின் படி, ‘பராசக்தி’ அடுத்தாண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இசை வெளியீட்டு விழா, திரைப்படத்தின் ரசிகர்கள் மற்றும் இசை விமர்சகர்களை கவரும் முக்கிய நிகழ்ச்சியாகும்.


இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் ‘பராசக்தி’ படத்தின் கதை குறித்து சில தகவல்கள் பரவத் தொடங்கியுள்ளன. அதன்படி, கதை அடிப்படையில் மெட்ராஸ் நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உரிமை மறுப்பு போராட்டம் நிகழ்வை மையமாகக் கொண்டுள்ளது.

அதாவது, போராட்டத்தை ஒழிக்க ஒரு அதிகாரி நகருக்கு வருகிறார். அதே சமயம், அவரது சகோதரர் தான் போராட்டத்திற்கு மூல காரணமாக இருக்கிறார். அதிகாரியும் குடும்ப உறவுகளும் எதிர்கொள்ளும் சூழலில், நாயகன் எடுக்கும் முடிவே ‘பராசக்தி’ படத்தின் மையக் கதையாகும். கதை “பாசமா? நீதியா?” என்ற கேள்வியைக் கையாளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கதை விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியவுடன் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பையும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சினிமா ஆர்வலர்கள் கதையின் அரசியல் மற்றும் குடும்ப உறவுகளை எதிர்பார்த்து உள்ளனர்.

Advertisement

Advertisement