தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பற்றிக் கூறிய வார்த்தைகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவியுள்ளன. சூர்யா தனது ஆரம்ப காலங்களில் எந்த வித படங்களையும் தேர்வு செய்யாமல் சிக்கலான கதாபாத்திரங்களையே முயற்சி செய்து நடித்திருந்தார். குறிப்பாக, நந்தா , காக்க காக்க, வாரணம் ஆயிரம் மற்றும் சிங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் அவரின் திறமையை வெளிப்படுத்தியதோடு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தன.
சினிமாவில் வெற்றி பெறுவது சாதாரண விஷயம் அல்ல. ஒவ்வொரு நடிகரும் மிகுந்த உழைப்புடனும், அர்ப்பணிப்புடனும் தான் வெற்றியை அடைகிறார்கள். இதை நிரூபிக்கும் வகையில், நடிகர் சூர்யா தனது வாழ்க்கையில் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளார். தனது தொடக்க காலங்களில் பல சவால்களை சந்தித்த சூர்யா இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருப்பதற்குக் காரணம் கடின உழைப்பு மட்டும் தான்.
மேலும் ஷாருக்கானின் வாழ்க்கை உழைப்பின் அடையாளம் என்றே கூறலாம். அவர் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, தனது கடின உழைப்பின் மூலம் பாலிவூட்டில் ‘கிங் கான்’ என அழைக்கப்படுகின்றார். அவருடைய மிகப்பெரிய வெற்றியின் ரகசியம் கடின உழைப்பே! இதைப் புரிந்து கொண்ட சூர்யா, தனது வாழ்க்கையில் இந்தக் கருத்தை மையப்படுத்தி பயணிக்கத் தொடங்கியதாக கூறுகிறார்.
ஷாருக்கானின் "நாய் மாதிரி உழைக்கணும், ராஜா மாதிரி வாழனும்" என்ற வரிகள் தனக்கு மிகுந்த உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்கின்றன என்றார். இதனைப் பின்பற்றியே தனது வாழ்க்கையில் கடினமாக உழைப்பதாகவும் கூறியுள்ளார்.
சூர்யா தனது கடின உழைப்பால் திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிவிட்டார். அத்துடன் தனது வெற்றியின் ரகசியம் கடின உழைப்பு என்றதுடன் ஷாருக்கானின் வார்த்தைகளை வழிகாட்டியாகக் கொண்டு இன்னும் உயர்ந்த இடங்களை நோக்கிச் செல்லுவேன் என்றும் கூறினார்.
Listen News!