தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர், கவிஞர், நடிகர், சமூக செயற்பாட்டாளர் என பல கோணங்களில் தன்னை முத்திரை பதித்தவர் சினேகன். இவருடைய தந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் காலமானார்.
சிறிய கிராமத்தில் இருந்து எப்படியாவது சினிமாவில் தனக்கு என ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தவர் தான் சினேகன். இவர் ஆரம்பத்தில் வைரமுத்துவின் உதவியாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.
புத்தம் புது பூவே என்ற பாடல் மூலம் பாடல் ஆசிரியராக அறிமுகமானார். அதற்குப் பிறகு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 2500க்கு மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளாராம். நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து கன்னிகா என்பவரை திருமணம் செய்தார் சினேகன். சமீபத்தில் தான் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. அடிக்கடி அவர்களுடைய புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
இந்த நிலையில், சினேகன் படித்த ஆரம்பப் பள்ளியில் அவருடைய மனைவி மகள்களோடு சென்றிருந்த அழகிய நினைவுகளை பகிர்ந்து உள்ளார். தற்போது பாடசாலை சீருடையில் அவர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
Listen News!