சமீபத்திய காலங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘திரெளபதி 2’. முன்னணி இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், பல முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் முக்கிய காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இப்படத்தின் இசை, பாடல்கள் மற்றும் கதை அனைத்தும் பெரும் விவாதங்களை எழுப்பி வருகின்றன.

சமீபத்தில் ‘திரெளபதி 2’ படத்தின் பாடல் ‘எம்கோனே’ பாடியதற்காக பாடகி சின்மயி மன்னிப்புக் கேட்ட பதிவு சமூகவலைத்தளத்தில் பரவியிருந்தது.
சமூக வலைதளங்களில் வெளியான இந்தப் பதிவு குறித்து திரெளபதி 2 இயக்குநர் மோகன் ஜி, சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார்.

அவர் அதன்போது, “என்கிட்ட என்ன சித்தாந்தத்தை தப்பா பாத்தாங்க.. பதிவை டெலீட் பண்ணிட்டா பிரச்சனையை முடிச்சுக்கலாம்.. இல்லைனா அடுத்த கட்டத்துக்கு நான் போவேன்.. அவங்க பண்ண மாதிரி நான் அசிங்கப்படுத்த விரும்பல.” எனக் கூறியுள்ளார்.
இந்த வார்னிங், பாடகி சின்மயிக்கு நேராகக் குறிப்பிடப்பட்டதாகும். இது, திரைப்படத்தின் கண்ணோட்டத்திற்கும், கதையின் மதிப்பிற்கும் எதிரான தவறான புரிதல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
Listen News!